புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 10 ஆகஸ்ட் 2024 (13:11 IST)

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதியில்லை.! காங்கிரஸ் தான் காரணம்.! மத்திய அரசு தகவல்.!!

Kerala Landslide
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில், அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.    
 
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் பெருமழை காரணமாக கடந்த 30-ம் தேதி அதிகாலை நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதன்காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 11-வது நாளாக நேற்று மீட்புப் பணி நடைபெற்றது.  

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்  என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதே போன்று பிரதமர் மோடி பேரழிவின் தீவிரத்தை நேரில் பார்வையிட்ட பின்னர், அதை தேசிய பேரிடராக அறிவிப்பார் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தார். 
 
இந்த நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடரை, தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.  2013ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான  பிரதமர் மன்மோகன் சிங், இயற்கை பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என கூறியிருந்தார்.
 
இந்நிலையில் காங்கிரஸின் அறிவிப்பை மேற்கோள் காட்டி, தற்போது வயநாடு நிலச்சரிவையும் இயற்கை பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

 
அதன்படி வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதியில்லை என்றும் தேசிய பேரிடராக அறிவிக்க விதியில்லை என 2013ல் மன்மோகன் அரசே தெளிவுபடுத்தியது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.