திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (19:23 IST)

வயநாடு நிலச்சரிவு..! நடிகர் பிருத்விராஜ் ரு.25 லட்சம் நிதியுதவி..!!

Prithiviraj
வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக நடிகர் பிருத்விராஜ் ரு.25 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
 
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 
 
நிலச்சரிவில் இருந்து மீண்ட மக்களுக்கு உதவும் வகையிலும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், நிவாரண உதவிகளை மேற்கொள்ளும் வகையிலும், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். 
 
அந்த வகையில் தற்போது நடிகர் பிருத்விராஜ் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். 


வயநாடு நிலச்சரிவில் சிக்கி வீடு, குடும்பத்தை இழந்தவர்களின் வங்கி கடன்களை கேரள வங்கி தள்ளுபடி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.