சனி, 14 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 10 ஆகஸ்ட் 2024 (20:19 IST)

வயநாடு நிலச்சரிவு.! நடிகைகள் குஷ்பு, சுஹாசினி, மீனா, லிசி உள்ளிட்டோர் ரூ.1 கோடி நிதி உதவி.!

Kerala Cm
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகைகள் குஷ்பூ, லிசி, மீனா, சுகாசினி ஆகியோர் கேரள முதல்வர் பினராய் விஜயனை நேரில் சந்தித்து நிவாரண நிதியாக ரூ. 1 கோடி வழங்கியுள்ளனர். 
 
கேரளாவில் வயநாட்டில் கடந்த ஜூலை 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக மூன்று கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தது. இந்த நிலச்சரிவு காரணமாக பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர்.
 
இதில் இதுவரை 400க்கும் மேற்பட்ட மக்கள் மரணமடைந்துள்ள நிலையில், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வயநாட்டில் கஷ்ட்டப்படும் மக்களுக்கு திரையுலக சேர்ந்த நடிகர், நடிகைகள் பலரும் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகிறார்கள்.
 
அந்த வகையில் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ஜோதிகா, நடிகர்கள் விக்ரம், மோகன்லால், மம்மூட்டி, சூர்யா, கார்த்தி, பிரபாஸ் இன்னும் பல திரையுலக நட்சத்திரங்கள் தொடர்ந்து வயநாடு மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

 
இந்த நிலையில்  திரையுலகில் 80-களில் முன்னணி நடிகைகளாக இருந்த குஷ்பூ, லிசி, மீனா, சுகாசினி ஆகியோர் கேரள முதல்வர் பினராய் விஜயனை நேரில் சந்தித்து நிவாரண நிதியாக ரூ. 1 கோடி வழங்கியுள்ளனர்.