புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (18:55 IST)

வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி..கேரள வங்கி அறிவிப்பு..!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வங்கியில் கடன் வாங்கி இருந்தால் அந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கேரள வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 30 ஆம் தேதி வயநாடு மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 400க்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகினர் என்பதும் ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் தெரிந்தது.

இந்திய ராணுவம் உள்பட மீட்பு படையினர் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் உயிரிழப்பு போக ஏராளமான பொருட்கள் சேதம் அடைந்திருப்பது அந்த பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கேரள வங்கி சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’வயநாடு நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி மரணம் அடைந்தோர், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோர் கடன்களை திருப்பி செலுத்த தேவையில்லை என்று கேரள வங்கி அறிவித்துள்ளதை அடுத்து அந்த வங்கிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதே போல் மற்ற வங்கியும் அறிவிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva