வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (09:27 IST)

பெட்ரோல் பங்க் இயங்குமா? அல்ல கொள்முதல் இல்லாததால் மூடலா??

தமிழகம் உள்பட 24 மாநிலங்களில் இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் இல்லை என  விற்பனையாளர்கள் சங்கம் முடிவு. 

 
மே 31 ஆம் தேதி (இன்று) எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து எரிபொருள் கொள்முதல் செய்வதில்லை என தமிழக எரிபொருள் விற்பனை நிலையங்கள் அறிவிப்பு. ஆம், மத்திய அரசின் திடீர் விலை குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து எரிபொருள் கொள்முதல் செய்வதில்லை என தமிழக எரிபொருள் விற்பனை நிலையங்கள் முடிவு செய்துள்ளன. 
 
இன்றைய போராட்டத்தில் தமிழகம் கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் உள்பட  24 மாநிலங்களில் உள்ள பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2017 ஆண்டில் இருந்து இதுவரை கமிஷன் தொகை உயர்த்தப்படவில்லை எனவும் அதை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கோரொயுள்ளனர்.
 
பெட்ரோல், டீசல் விலையை படிப்படியாக குறைக்க வேண்டும் என டீலர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் திடீரென விலை குறைக்கப்பட்டதால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி இந்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
 
மேலும் எண்ணெய் கிடங்குகளில் இருந்து எரிபொருள் கொள்முதல் மட்டுமே நிறுத்தப்படுவதாகவும், ஆனால் பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.