1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 31 மே 2022 (09:53 IST)

சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமா?

petrol
சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
இதனை அடுத்து இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இதனையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  எனவும் விற்பனையாகி வருகிறது. 
 
சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்தால் பெட்ரோல் விலை 8 ரூபாயும் டீசல் விலை 6 ரூபாயும் குறைந்தது 
 
அதேபோல் மாநில அரசும் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்