1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 22 ஆகஸ்ட் 2018 (18:14 IST)

கேரள மக்களை வீட்டிற்கு வரவேற்கும் பாம்புகள்: பீதியில் மக்கள்!

தென்மேற்கு பருவமழை கேரளாவை புரட்டிப்போட்டது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட கேரளா தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.  
 
வெள்ள நீர் வடிய துவங்கியுள்ளதால், பொது மக்கள் தங்களது வீடுகளை சுத்தம் செய்து குடியேற துவங்கியுள்ளனர். ஆனால், இவர்களை வரவேற்க பாம்புகள் காத்திருக்கின்றன.
 
ஆம், வெள்ள நீர் வடிந்துள்ளதால் ஆங்காங்கு பாம்புகள் நடமாட்டம் காணப்படுதால் மக்கள் பயத்தில் உள்ளனர். இதுவரை அங்காமியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 53 பேர் பாம்பு கடிக்கு ஆளாகி அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இது குறித்து கேரள அரசு தரப்பில், மக்கள் வீடுகளுக்குள் செல்லும் போது கையில் கொம்பை கொண்டு செல்லவும். வீட்டில் உள்ள பாத்திரங்கள் ஆகியவற்றை பார்த்து பயன்படுத்ததும். 
 
மேலும், தண்ணீரில் மண்ணெண்ணெய் கலந்து வீட்டை சுத்தம் செய்தால், வீட்டில் தென்படாமல் தங்கியிருக்கும் பாம்புகளும் வெளியேறும். மக்கள் சில நாட்களுக்கு எச்சரிக்கையாக இருக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.