திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (20:32 IST)

உனக்கு இது தேவையாம்மா... பாராட்டி வாங்கி கட்டிகொண்ட டிடி

சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கிட்டத்தட்ட கேரள மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. லட்சக்கணக்கானோர் அடிப்படை தேவையான உணவு, உடை கூட இல்லாமல் முகாம்களில் அகதிபோல் தங்கியுள்ளனர். கேரள அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகளை செய்து வருகின்றது.

 
மக்கள் பலர் கேரளா மக்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பொது மக்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் நிதியுதவி அளித்துள்ளனர்.
 
இந்நிலையில், துபாயில் வேலை பார்க்கும் பாகிஸ்தானியர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர். இது குறித்த செய்தியை பார்த்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி ட்விட்டரில் வாவ் என்று கூறி அவர்களை பாராட்டியுள்ளார்.
 
இதனால், அவரை நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர். முப்படைகள் செய்யும் வேலையை பாராட்டாமல் பாகிஸ்தானியர்களை பாராட்டுவதா? கேரளாவுக்கு நீங்கள் என்ன உதவி செய்தீர்கள்? என கேட்டு டிடியை திட்டி வருகின்றனர்.