வந்தே பாரத் ரயில் கிளம்புவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் டிக்கெட் எடுத்தால் அபராதம்.. பயணிகள் அதிருப்தி..!
வந்தே பாரத் ரயில் கிளம்புவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு டிக்கெட் கேட்டால், அபராதத்துடன் டிக்கெட் வழங்கப்படுகிறது என பயணிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக, வந்தே பாரத் ரயிலில் முன்பதிவு செய்து பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், ரயில் கிளம்புவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு முன்பதிவு நிறுத்தப்படும். முன்பதிவு நிறுத்தப்பட்டவுடன், ரயிலில் காலியிடங்கள் இருந்தாலும், அதில் பயணம் செய்ய ஆன்லைன் மற்றும் கவுண்டர்களில் டிக்கெட் எடுக்க முடியாது.
அதற்கு பதிலாக, டிக்கெட் பரிசோதகர்கள் மட்டுமே டிக்கெட் வழங்குவார்கள். ஆனால், அவர்கள் 30 நிமிடங்களுக்குள் வந்து டிக்கெட் கேட்டால், வழக்கமான கட்டணத்துடன் அபராத தொகையும் சேர்த்து பெறுகின்றனர். இதனால், பயணிகளுக்கு கூடுதலாக ₹400 செலவாகிறது.
இது பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த தெற்கு ரயில்வே அதிகாரிகள், "வந்தே பாரத் ரயிலுக்கான விதிமுறைகள் அப்படித்தான் வகுக்கப்பட்டுள்ளன. இதில் ரயில்வே வாரியம் மாற்றம் செய்தால் தான் இதனை சரி செய்ய முடியும்" என்று கூறியுள்ளனர்.
Edited by Siva