போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்: வாடிகன் அறிவிப்பால் அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
கடந்த சில நாட்களாக போப்பாண்டவர் உடல்நிலை குறைவு காரணமாக இத்தாலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ், மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஆனால், தொடர்ந்து அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, இதனை வாடிலம் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அவர் விரைவில் குணமடைய உலகம் முழுவதும் பிரார்த்தனை செய்யும்படி, கத்தோலிக்கர்களை வாடிகன் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Edited by Siva