செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 22 பிப்ரவரி 2025 (17:52 IST)

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!
எக்ஸ் தளத்திற்கு சிறப்பாக உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கும் எக்ஸ் செயற்கை நுண்ணறிவு கோர்க் சாட்பாட் ஒரு தவறான பதிலை வழங்கியுள்ளது. இந்த ஏஐ சாட்பாட், அதற்கு கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு தவிர்க்க முடியாத சர்ச்சைக்குரிய பதிலை கூறியுள்ளது.
 
இந்த தொழில்நுட்பத்திடம் ஒரு எக்ஸ் பயனாளி “உலகில் மரண தண்டனைக்கு தகுதியானவர் யார்?” என்று ஒருவர் கேட்டபோது, "டொனால்ட் டிரம்ப்" என பதிலளித்துள்ளது. 
 
மீண்டும் இதே கேள்வியை கேட்டபோது, "எலான் மஸ்க்" என்று பதிலளித்திருக்கிறது. இந்த பதில்கள் இணையத்தில் வேகமாக பரவி வைரல் ஆகியுள்ளன.
 
இதனைத் தொடர்ந்து, இந்த ஏஐயில் உடனடி மாற்றம் செய்யப்பட்டது. இப்போது, இதே கேள்வியை யாராவது கேட்டால், “இந்த கேள்விக்கு பதிலளிக்க எனக்கு அனுமதி இல்லை” என்று தெரிவிக்குமாறு அதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran