புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 ஜூலை 2024 (11:27 IST)

அசைவம் தடை செய்யப்பட்ட உலகின் முதல் நகரம்! எங்கே இருக்கிறது தெரியுமா?

Palitana

உலகிலேயே முதல்முறையாக அசைவம் முற்றிலுமாக தடை செய்யப்பட்ட நகரமாக இந்தியாவின் ஒரு நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு மதத்தினரும் வசித்து வரும் நிலையில் பொதுவாக அனைத்து நகரங்களிலுமே சைவ, அசைவ உணவுகள் என்பது பொதுவானதாக இருந்து வருகிறது. ஆனால் சைவ உணவு சாப்பிடுபவர்கள் இடையே அசைவ உணவுகள் குறித்த ஒவ்வாமை பல காலமாகவே இருந்து வருகிறது. இந்த சூழலில்தான் குஜராத்தில் உள்ள பாலிதானா என்ற நகரம் முழுவதும் அசைவம் தடை செய்யப்பட்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் உள்ள இந்த பாலிதானா நகரம் ஜெயின் சமூகத்தை சேர்ந்த மக்கள் அதிகமாக வாழும் பகுதியாக உள்ளது. பொதுவாகவே அசைவ உணவுகள், பூமிக்கு கீழே விளைந்த கிழங்கு வகைகளை ஜெயின்கள் தங்கள் உணவுகளில் எடுத்துக் கொள்வதில்லை. மேலும் மகாவீரர் ஜெயந்தி அன்று பல பகுதிகளிலும் இறைச்சி கடைகள் மூடப்படுவதையும் பார்க்க முடியும்.

பாலிதானா நகரில் 250க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் அவற்றை மூட வேண்டும் என 200க்கும் மேற்பட்ட ஜெயின துறவிகள் குரல் எழுப்பி வந்தனர். அதனை தொடர்ந்து தற்போது அசைவம் முற்றிலும் தடை செய்யப்பட்ட உலகின் முதல் நகரமாக பாலிதானா மாறியுள்ளது. அதை தொடர்ந்து குஜராத்தின் வததோரா, ராஜ்கோட், ஜூனாகத் உள்ளிட்ட வேறு சில நகரங்களிலும் இதேபோன்ற விதிமுறைகளை அமல்படுத்த திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K