உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் இறுதிப்போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
நேற்று நடந்த இந்த இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. சோகேப் மாலிக் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார்.
இதனை அடுத்து யுவராஜ் தலைமையிலான இந்திய அணி 157 என்ற இலக்கை நோக்கி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரரான அம்பத்தி ராயுடு மிக அபாரமாக விளையாடி 30 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.
அதன் பின்னர் குர்கித் சிங் 34 ரன்கள், யூசுப் பதான் 30 ரன்கள் எடுத்த நிலையில் 19.1 ஓவரில் இந்திய அணி 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva