ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 14 ஜூலை 2024 (09:52 IST)

இரண்டாவது நாளிலேயே படுத்துவிட்ட ‘இந்தியன் 2’ வசூல்.. கமல் கேரியரில் மோசமான வசூல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 55 கோடி மட்டுமே வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது நாளில் இந்த படம் மிகப்பெரிய சரிவை கண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன

இந்த படத்திற்கு தொடர்ச்சியாக நெகட்டிவ் கமெண்ட் பதிவான நிலையில், யூடியூபில் வீடியோ பார்த்த உணர்வு தான் இந்த படத்தை பார்க்கும்போது கிடைத்தது என்றும் கூறப்பட்டது. ‘இந்தியன் 2’ தமிழகத்தில் முதல் நாளில் 13 கோடி ரூபாய் வசூல் செய்தது என்றும் உலகம் முழுவதும் 55 கோடி ரூபாய் வசூல் செய்தது என்று கூறப்பட்ட நிலையில் இரண்டாவது நாளில் இந்தியன் 2 திரைப்படம் வெறும் 16 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


இதே ரீதியில் என்றால் இந்த படம் 100 கோடியை தொடுவது கூட கடினம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் ரூபாய் 300 கோடி என்ற கூறப்பட்ட நிலையில் செலவழித்த தொகை திரும்ப வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

’இந்தியன் 2’ படத்தின் நீளம் ஒரு குற்றச்சாட்டாக கூறப்பட்ட நிலையில் தற்போது படத்தின் நீளம் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Editedd by Siva