திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 21 ஜூலை 2023 (10:36 IST)

சிறுநீர் கழிக்க வந்தே பாரத் ரயிலில் ஏறிய பயணி.. ஏற்பட்ட விபரீதம்..!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வேற ஒரு ரயிலுக்காக தனது குடும்பத்துடன் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணி ஒருவர் வந்தே பாரத் ரயிலில் சிறுநீர் கழித்துவிட்டு திரும்பிவிடலாம் என்று ஏறியவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
வந்தே பாரத் ரயில் பிளாட்பாரத்தில் நின்றவுடன் சிறுநீர் கழிப்பதற்காக அந்த ரயிலில் ஒரு பயணி ஏறி உள்ளார். ஆனால் அவர் சிறுநீர் கழித்து ரயிலில் இருந்து வெளியேறும் முன்பே தானியங்கள் கதவுகள் மூடிக்கொண்டு ரயிலும் கிளம்பிவிட்டது.. 
 
இதனை அடுத்து டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததுக்காக அபராதம் விதிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி அவரது குடும்பம் முந்தைய ரயில்வே ஸ்டேஷனில் இருந்ததால் அவர் பேருந்து பிடித்து ரயில் நிலையத்திற்கு வருவதற்குள் அவர் பிடிக்க வேண்டிய ரயிலும் சென்று விட்டது 
 
இதனால் அவருக்கு சுமார் 6000 ரூபாய் பொருள் நஷ்டமும் மனக்கஷ்டமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran