திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 6 ஜூலை 2023 (13:05 IST)

சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரின் காலைக் கழுவிய முதலமைச்சர்!

மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின இளைஞர் ஒருவரின் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அந்த இளைஞரின் கால்களை கழுவி மரியாதை செலுத்தி உள்ளார். 
 
மத்திய பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஒருவர் மீது பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லாஎன்பவர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில்  எதிர்க்கட்சிகள் பாஜகவை கடுமையாக விமர்சித்த நிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் அந்த இளைஞரை அழைத்து வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அவரது கால்களை கழுவி அவரிடம் மன்னிப்பு மன்னிப்பு கேட்டு உள்ளார் 
 
எனது கட்சிக்காரர் சேர்ந்தவர் என்பதற்காக சம்பந்தப்பட்ட குற்றவாளி தப்ப முடியாது என்றும் கண்டிப்பாக அவர் காப்பாற்றப்பட மாட்டார் என்றும் சட்டம் தனது கடமையை செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Siva