திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 14 மே 2023 (08:31 IST)

ராஜினாமா செய்தார் பசவராஜ் பொம்மை.. கர்நாடகாவில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்

Pasavaraj Bommai
சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. 
 
காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை 135 தொகுதிகள் கிடைத்துள்ளதை அடுத்த அந்த கட்சி தனி பெரும்பான்மையுடன் எந்தவித கூட்டணியும் இல்லாமல் ஆட்சி அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பாரதிய ஜனதா கட்சி 66 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் 19 தொகுதிகளிலும் மற்றவை நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனை அடுத்து ஆளுங்கட்சியாக இருந்த பாஜக எதிர்க்கட்சி வரிசையில் உட்கார போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியதை அடுத்து முதலமைச்சர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார். அவர் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய நிலையில் ஆளுநர் அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார். இன்னும் ஒரிரு நாளில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva