புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2020 (10:30 IST)

ஆதார் - பான் இணைக்கவில்லையா? ரூ.10,000 அபராதம்!!

ஆதார் மற்றும் பான் எண்ணை இனி மேலும் இணைக்காமல் காலம் தாழ்த்தினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசு 2019 மார்ச் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது.
 
பிறகு பல்வேறு காரணங்களால் ஆறு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கடைசியாக செப்டம்பர் 31க்குள் இணைக்க வேண்டும் என்ற கால அவகாசம் டிசம்பர் 31 ஆக நீட்டிக்கப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் ஒரு வாய்ப்பாக 2020 மார்ச் மாதம் இறுதி வரை கால அவகாசம் வழங்கியது மத்திய நிதி அமைச்சகம்.
 
இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் (மார்ச் 31,2020) பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்க வருமான வரித்துறை முடிவெடுத்துள்ளது. மேலும், பான் கார்டுகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 
 
வருமானவரி தாக்கல் செய்ய பான் - ஆதார் இணைப்பு கட்டாயம் என்பதால் மத்திய நிதி அமைச்சகம் தொடர்ந்து இரண்டையும் இணைக்கும்படி மக்களிடம் வலியுறுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.