செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 27 பிப்ரவரி 2020 (08:15 IST)

ஜப்பான் கப்பலில் சிக்கியிருந்த 119 பேர்: வெளியுறவுத்துறை அமைச்சரின் முக்கிய டுவீட்

ஜப்பான் கப்பலில் சிக்கியிருந்த 119 பேர்
கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனா மட்டுமின்றி உலகின் பல நாடுகள் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் சென்ற கப்பலில் பயணம் செய்த பயணிகளில் சிலருக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்ததை அடுத்து அந்த கப்பல் நடுக்கடலில் நிறுத்தப்பட்டது அதன் சிக்கியிருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் கப்பலில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதியுற்றனர் 
 
மேலும் அந்த கப்பலில் தமிழர்கள் உள்பட 119 இந்தியர்கள் பயணம் செய்தார்கள் என்பதும் அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. இந்த நிலையில் அதிரடி நடவடிக்கை எடுத்த இந்திய வெளியுறவு அமைச்சகம் ஜப்பான் அரசுடன் பேசி கப்பலில் உள்ள 119 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்தது 
 
இந்த நடவடிக்கை காரணமாக நேற்று சிறப்பு விமானம் மூலம் ஜப்பான் கப்பாலில் இருந்த 119 இந்தியர்கள் டெல்லிக்கு விமானம் மூலம் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மட்டுமின்றி நேபாளம் இலங்கை தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 5 பேரும் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்ட 119 இந்தியர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்து அவர்களுக்கு வைரஸ் தாக்குதல் இல்லை என்று உறுதி செய்தபின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் கொரோனா வைரஸ் தாக்குதல் இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்றும் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
 
இந்த நிலையில் 119 பேர் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட வெளியூர் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது