இறந்த தாயின் மார்பில் பால் குடிக்க முயற்சிக்கும் 1 வயது குழந்தை: அதிர்ச்சி புகைப்படம்
இறந்த தாயின் மார்பில் பால் குடிக்க முயற்சிக்க்கும் 1 வயது குழந்தை
இறந்த தாயின் மார்பில் 1 வயது குழந்தை பால் குடிக்க முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இளம் பெண் ஒருவர் தனது 1 வயது குழந்தையுடன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் குழந்தையுடன் தவறி இரயிலில் இருந்து விழுந்து விட்டதாக தெரிகிறது. படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய அந்த தாயார், அப்போதும் தனது குழந்தையை காப்பாற்றும் நோக்கில் தாய்ப்பால் கொடுக்க முயற்சித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சிறிது நேரத்தில் அந்தப் பெண் உயிரிழந்துவிட்டார்
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, தாய் இறந்து விட்டது கூட தெரியாமல் அந்த இளம்பெண்ணின் மார்பில் அவரது 1 வயது குழந்தை தாய்ப்பால் குடிக்க முயற்சி செய்து கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
சமீபத்தில் பீகார் மாநிலத்தில் ரயில் நிலையம் ஒன்றில் இறந்த தாயை எழுப்ப முயற்சித்த குழந்தை ஒன்றின் வீடியோ நாடு முழுவதும் வைரல் ஆனது என்பது தெரிந்ததே. அதேபோல் நடந்துள்ள இந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் சோகத்தில் உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது