1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 29 ஏப்ரல் 2024 (11:03 IST)

அந்தரங்க உறுப்பில் ஒரே அடி.. கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய பெண்! – சிக்கியது எப்படி?

மகாராஷ்டிராவில் முறை தவறிய காதலில் இருந்து ஆண் நபரை இளம்பெண் மர்ம உறுப்பில் தாக்கிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள ஆகாஷ் நகரை சேர்ந்தவர் 55 வயதான ரவீந்திர குட்வே. இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்கள் முன்னதாக குட்வே அவரது வீட்டின் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸார் குட்வேயின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது குட்வே தனது அந்தரங்க உறுப்பில் தாக்கப்பட்டதால் பலியானது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. அதையடுத்து போலீஸார் குட்வேயின் மகனிடம் விசாரித்தபோது, ரவீந்திர குட்வேக்கும், அதே பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் காஜல் ஜோக் என்பவருக்கும் ரகசிய தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காஜல் ஜோக்கை விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


ரவீந்திர குட்வேயுடன் கள்ள உறவில் இருந்த காஜல் அடிக்கடி குட்வேயை சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். சமீபத்தில் காஜலுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயித்துள்ளனர். இதனால் காஜல் குட்வேயிடம் பேசுவதை குறைத்துக் கொண்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு எழுந்த நிலையில், சம்பவத்தன்று தனது காதலியை வீட்டருகே அழைத்து பேசிய குட்வே திருமணம் குறித்து விசாரித்துள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது ஆத்திரத்தில் காஜல், ரவீந்திர குட்வேயின் அந்தரங்க உறுப்பில் எட்டி உதைத்துள்ளார். இதனால் குட்வே அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில் காஜல் தப்பியோடியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் காஜலை கைது செய்துள்ளனர்.

Edit by Prasanth.K