வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 5 ஜூன் 2023 (21:36 IST)

ஒடிஷா ரயில் விபத்து: 1009 பேர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து டிஸ்சார்ஜ் - ஒடிஷா அரசு

பாலாஷோர் ரயில்கள் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் பற்றிய தகவலை ஒடிஷா அரசு தெரிவித்துள்ளது.

ஒடிஷாவில் கடந்த 2 ஆம் தேதி இரவில் பெங்களூரு- ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்- சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், மற்றும் சரக்கு ரயில் 3 ரயில்களும் விபத்தில் சிக்கியது. இதில்,  275 பேர் உயிரிழந்தனர். 1000 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் பணிகள் தீவிரமாக  நடைபெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், பாலாஷோர் ரயில்கள் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1207 பேரில் 1009 பேர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்துவிட்டதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவரது உடல்நிலை மட்டும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறியுள்ளனர்.