பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து- மத்திய அரசு ஒப்புதல்
பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள மதிய உணவுகளை வழங்கும் போஷன் அபியான் திட்டத்திற்கு இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள மதிய உணவுகளை வழங்கும் போஷன் அபியான் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதில், 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் போஷான் அபியான் திட்டத்திற்கு ரூ.1.31 லட்சம் கோடி செலவிடப்படவுள்ளதாகவும், ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகத்தில் ரூ.4 000 கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும் மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது.