1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 29 செப்டம்பர் 2021 (15:33 IST)

மதுரவாயல் 2 அடுக்கு பறக்கும் சாலை - மும்முராக துவங்கும் வேலைகள்!

இந்தியாவிலேயே முதன் முறையாக இரண்டு அடுக்கு சாலையாக மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் அமைய உள்ளது. 
 
இதற்காக சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை 3 மாதத்தில் நிறைவடையும் என நெடுஞ்சாலைத்துறை செயலாளர்  தீரஜ்குமார் தெரிவித்துள்ளார். தற்போது எந்த இடத்தில் அணுகு சாலைகள் அமைக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 
 
முதல் தளத்தில் வாகனங்கள், இரண்டாம் தளத்தில் கண்டெய்னர் செல்லும் வகையில் சாலை அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.