1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Schools open as children are depressed

குழந்தைகள் மன உளைச்சலில் உள்ளதால் பள்ளிகள் திறப்பு!!

பள்ளிகள் திறப்பு
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவியது. இந்தியாவிலும் தொற்றுப் பரவ அதிகரித்ததை அடுத்து, ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டது.

தற்போது சில தளர்வுகள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழகத்தில் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், தனியார் பள்ளிக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறியுள்ளதாவது: 6 -8 ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறந்த பிறகு அடுத்த கட்டமாக 1-5 க்கு வகுப்புகள் திறக்கப்பட வேண்டும். குழந்தைகள் மன உளைச்சலில் உள்ளதால் பள்ளிகள் திறப்பதுதான் சரி எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
திருவாரூரில் பொது இடங்களில் மது அருந்த தடை! – மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை!