வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 29 செப்டம்பர் 2021 (15:55 IST)

நம்ம வாய் நல்ல இருந்தா எல்லா வீடும் நல்ல வீடுதான் - இன்னும் 4 நாளில் பிக்பாஸ் 5!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. வழக்கம் போலவே கமல் ஹாசனே தொகுத்து வழங்க உள்ள இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தேர்வு இந்த முறை வழக்கத்தை விட கொஞ்சம் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.
 
ஆம், திருநங்கை, திருநங்கை மாடல் அழகி, விஜய் டிவி பிரபலங்கள் என போட்டியாளர்கள் அத்தனை பேரும் நிகழ்ச்சிக்கு பெரும் பங்களிப்பார்கள் என கூறலாம். வருகிற அக்டோபர் 3ம் தேதி முதல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றை சற்றுமுன் விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் கமல் ஹாசன், இந்த வீடு நல்ல வீடானு கேட்டுறாங்க...? நம்ம வாய் நல்லா இருந்தா எல்லா வீடும் நல்ல வீடு தான் என இன்னும் நான்கு நாட்களே இருக்கிறது என்று கூறி முடித்தார்.