வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (17:30 IST)

6 மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

Election Commission
6 மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் பற்றிய அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஜார்கண்ட், கேரளா, திரிபுரா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில்  காலியாக உள்ள  7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் செப்டம்பர்  5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இடைத்தேர்தலுக்கான அறிவிப்பானை நாளை மறுநாள் வெளியாகவுள்ளது அன்றைய தினம் முதல் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதிவரை வேட்புமனுதாக்கல்  செய்யலாம் எனவும்,ஆகஸ்ட் 18 ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் எனவும், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவர்கள் வரும் ஆகஸ்ட்  21 ஆம் தேதிக்குள் திரும்ப பெறலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும், செப்டம்பர்  5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும், இவ்வாக்குகள் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டும் முடிவு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையொட்டி தேர்தல் நடைமுறை இன்று முதல் மேற்கூறிய மாநிலங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது.