வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 ஜூன் 2024 (08:13 IST)

மோசமான சாலைகளுக்கு சுங்க கட்டணம் கிடையாது! – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

இந்தியாவில் மோசமாக பராமரிக்கப்படும் சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.



இந்தியா முழுவதும் மத்திய நெடுஞ்சாலைத்துறை பல்வேறு வழித்தடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்துள்ள நிலையில், அந்த சாலைகளை பயன்படுத்துவதற்காக சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சில பராமரிப்பற்ற சாலை தடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதும், ஒரே வழித்தடத்தில் அடுத்தடுத்து பல சுங்கச்சாவடிகளை அமைத்து வசூலிப்பதும் வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் டெல்லியில் நடந்த செயற்கை கோள் உதவியுடன் வாகனங்களை கண்காணித்து கட்டணம் வசூலிக்கும் திட்டம் குறித்த கூட்டத்தில் பேசிய மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சுங்க கட்டணம் வசூலிப்பது குறித்த புதிய நெறிமுறைகளை குறித்து பேசியுள்ளார்.


அதில் அவர் “சிறப்பான சாலைகள் உள்ள வழித்தடங்களில் மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும். பராமரிப்பில்லாத, மோசமாக உள்ள சாலைகளில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக்கூடாது. குண்டும், குழியுமாக சாலையை வைத்துக்கொண்டு அங்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க நினைத்தால் மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.