வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 28 நவம்பர் 2024 (09:57 IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்?

tnpsc
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், கலந்தாய்வுக்கு செல்லும் போது விண்ணப்பதாரர்கள் என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்து முடிவுகளும் வெளியான நிலையில், தற்போது சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 6244 பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதிய நிலையில், தற்போது அடுத்த கட்டமாக தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்தாய்வுக்கு தயாராகி வருகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் 200 பேர், அடுத்தடுத்த நாட்களில் 200 பேர் என கலந்தாய்வுக்கு அழைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கலந்தாய்வுக்கு செல்லும் விண்ணப்பதாரர்கள், டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திற்கு தாமதம் இன்றி உரிய நேரத்தில் செல்ல வேண்டும் என்றும், அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களையும் அதனுடன் அதன் நகல்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மூன்று பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு சான்றிதழ்கள், டிகிரி அல்லது ப்ரொஃபஷனல் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ், சிறப்பு கேட்டகிரியில் இருந்தால் அதற்கான சான்றிதழ்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Edited by Siva