ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 24 ஏப்ரல் 2024 (16:47 IST)

அமைச்சர் நிதின் கட்காரி மருத்துவமனையில் அனுமதி.. தேர்தல் பிரச்சாரத்தின்போது மயக்கம்..!

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 
 
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து வரும் நிலையில் முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. 
 
இந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரது ஆதரவாளர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
மத்திய அமைச்சர் கட்காரி உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு தொலைபேசி மூலம் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
Edited by Siva