செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 16 மே 2024 (18:24 IST)

நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது..! ED-க்கு உச்சநீதிமன்றம் செக்..!!

supremecourt
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் நீதிமன்ற அனுமதி இன்றி யாரையும் கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
 
பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாமீன் மனு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம் அமலாக்க துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு சிறப்பு நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவரை காவலில் எடுக்க விரும்பினால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது. 

 
குற்றம் சட்டப்பட்டவரை அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்ப வேண்டுமா? வேண்டாமா என சிறப்பு நீதிமன்றம்தான் முடிவு செய்யும் எனவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.