ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 15 மே 2024 (12:15 IST)

வாரணாசி தொகுதி குறித்த வழக்கு தாக்கல் செய்த அய்யாக்கண்ணு.. தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்..!

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், வேட்பு மனு தாக்கல் செய்யும் அவகாசத்தை நீட்டிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மனு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
 
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், வேட்பு மனு தாக்கல் செய்யும் அவகாசத்தை நீட்டிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது 
 
முன்னதாக வாரணாசியில் ஏன் போட்டியிட விரும்புகிறீர்கள்? என அய்யாக்கண்ணுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். மேலும் ஏன் தமிழ்நாட்டில் போட்டியிடவில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்த பொதுநல மனு என்பதால் தள்ளுபடி என நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த எங்களை ரயில் நிலையத்தில் தடுத்து போலீசார் கைது செய்தனர் என்ற காரணத்தை அய்யாக்கண்ணு தனது மனுவில் கூறியிருந்த நிலையில் அந்த காரணம் நீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை.
 
Edited by Mahendran