1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 15 மே 2024 (12:36 IST)

அமலாக்கத்துறை கோரிக்கை நிராகரிப்பு..! செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது நாளை விசாரணை..!

senthil balaji ed
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
தனக்கு ஜாமின் வழங்க கோரியும், கைது நடவடிக்கைக்கு எதிராகவும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணை வந்தபோது, அமலாக்கத்துறை சார்பில் வழக்கை தள்ளி வைக்க கோரிக்கை வைத்தனர். அதற்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் வழக்கை மே 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள் அடுத்த முறை நிச்சயம் விசாரணை நடைபெறும் என உறுதி அளித்தனர்.
 
இந்த நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கோடை விடுமுறைக்கு பின்னர் வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என்ற அமலக்கத்துறை கோரிக்கை விடுத்தது.


ஆனால், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.