1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 8 மே 2020 (17:11 IST)

கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களை தவிர அனைவரும் பாஸ்: அரசு அறிவிப்பு

கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களை தவிர அனைவரும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி என மகாராஷ்ட்ரா அரசு அறிவிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளிலும் நடைபெறாத நிலையில் இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர மற்ற அனைத்து மாணவர்களும் தேர்வு இன்று பாஸ் என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது
 
கல்லூரிகளில் படிக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி அடுத்த ஆண்டுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும் என்று அறிவித்துள்ளது 
 
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால் அம்மாநிலம் இயல்பு நிலை திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்த இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பதால் முதலாமாண்டு இரண்டாமாண்டு மாணவர்களை மட்டும் தேர்வு இன்றி பாஸ் என்ற முடிவை மகாராஷ்டிரா அரசு எடுத்துள்ளது 
 
இந்த தகவலை மகாராஷ்டிர மாநில உயர் மற்றும் தொழில் கல்வி அமைச்சர் உதய்சம்பத் அவர்கள் சற்று முன் அறிவித்துள்ளார். இறுதியாண்டு மாணவர்களுக்கு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்