மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு - முதல்வர் உத்தவ் தாக்கரே
சீனாவில் இருந்து பல்வேறு உலகநாடுகளில் கொரோனா தொற்று பரவிவருகிறது. இந்நிலையில், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதிவரை நீட்டிக்கப்படும் எனவும், இன்று இரவு நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றுவார் என தகவல் வெளியாகிறது. தற்போதுவரை இந்தியாவில் 7600 மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 249 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் இதுவரை 1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், நேற்று மட்டும் 16,564 சோதனைகள் நடத்தப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஊரடங்கு நீட்டிப்பு நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,666 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர் என தகவல் வெளியாகிறது.
இந்நிலையில் அம்மாநிலத்தில் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
இதேநிலை நீட்டித்தால், ஏல்.,30க்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கபடும் என தெரிவித்துள்ளார்.