புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (17:20 IST)

3 மாதங்களுக்கு வாடகை வாங்க வேண்டாம்: வீட்டு ஓனர்களுக்கு அரசு வலியுறுத்தல்..

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் முதல்கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மே 3 வரை இருக்கும் என்றும் அதன் பின்னரும் கொரோனா பாதிப்பு நீடித்தால் ஊரடங்கும் நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் முதல் வேலையின்றி வருமானம் இன்றி பல குடும்பங்கள் தவித்து வருகின்றன. ஏழை எளிய மக்கள் பசியும் பட்டினியுமாக சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கும் நிலையில் வாடகை போன்ற மற்ற செலவுகளை அவர்களால் சமாளிக்க முடியாத நிலை உள்ளது
 
இந்த நிலையில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் வீட்டு வாடகை வாங்க வேண்டாம் என்று வீட்டு உரிமையாளர்களுக்கு அரசு வலியுறுத்தி வருகிறது. டெல்லி போன்ற மாநிலங்கள் வீட்டு வாடகையை அரசே அளித்துவிடும் என்றும் கூறி வருகிறது 
 
இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிர மாநிலம் வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளது. இதன்படி குறைந்தது மூன்று மாதங்களுக்கு வீட்டு வாடகை வாங்க வேண்டாம் என்றும், வீட்டு வாடகை செலுத்தாதவர்களை வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மீறி வீட்டு வாடகையை கட்டாயப்படுத்தினால் அல்லது வீட்டை காலி செய்ய சொன்னால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் வீட்டு வாடகை வாங்க கூடாது என்று அரசு அறிவுறுத்திய நிலையிலும் வீட்டு உரிமையாளர்கள் வீட்டில் குடியிருப்பவர்களிடம் கட்டாயப்படுத்தி வீட்டு வாடகை வாங்கி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன