புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 8 மே 2022 (08:44 IST)

முதுகலை நீட் தேர்வு ஒத்தி வைப்பா? தேசிய தேர்வு வாரியம் விளக்கம்!

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப் பட்டுள்ளது என்று இணையத்தில் பரவும் தகவல் போலியானது என தேசிய தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 

 
2022 ஆம் ஆண்டில் MD, MS படிப்புகளில் சேர நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வு ( NEET - PG ) வரும் மே 21 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் பல தரப்பினர் முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க கோரினர். இந்த கோரிக்கையை ஏற்று ஜூலை 9 ஆம் தேதிக்கு முதுநிலை நீட் தேர்வு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது என நேற்று தகவல் வெளியாகியது. 
 
இந்நிலையில் தேசிய தேர்வு வாரியம் இது குறித்து தெரிவித்துள்ளதாவது, முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப் பட்டுள்ளது என்று இணையத்தில் பரவும் தகவல் போலியானது. திட்டமிட்டபடி மருத்துவப் படிப்புகளக்கான நீட் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெறும்.
 
சமூக வலைதளங்களில் பரவும் போலியான தகவல்களை யாரும் நம்பவேண்டாம். தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://natboard.edu.in வரும் அறிவிப்புகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். மேலும், தேர்வு தொடர்பான தகவல்களை பெறு 011-45593000 அழைக்கவும் என தேசிய தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.