திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 8 நவம்பர் 2023 (07:58 IST)

பெண்கள் கல்வி அறிவு பெற்றால் குழந்தை பிறக்கும் விகிதம் குறையும்: நிதிஷ்குமார்

பெண்கள் கல்வி அறிவு பெற்றால் குழந்தை பிறப்பு விகிதம் குறையும் என பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் சட்டமன்றத்தில் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கணவரின் செயல்பாடுகள் தான் குழந்தை பிறப்பதற்கு காரணம் என்றும் பெண்கள் கல்வி அறிவின் மூலம் கணவரை கட்டுப்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் என்றும் முதல்வர் நிதிஷ்குமார் பேசினார். அவரது இந்த பேச்சுக்கு பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் சில பெண் எம்எல்ஏக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

70 வயதாகும் நிதிஷ்குமார் முட்டாள்தனமான கருத்துக்களை கூறியுள்ளார் என்றும் பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு வார்த்தைகளை அவர் பயன்படுத்தி இருப்பதாகவும் பெண் பாஜக பெண் எம்.எல்.ஏ காயத்ரி தேவி தெரிவித்தார்.

இந்திய அரசியலில் நிதீஷ் குமாரை விட ஒரு இழிவான அரசியல்வாதி யாரும் இருக்க மாட்டார்கள் என பாஜக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. நிதிஷ்குமாரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சை ஆகிவிட்டதால் பீகார் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva