ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 24 ஜூலை 2018 (15:34 IST)

ஓ.பி.எஸ்-க்கு அனுமதி மறுத்த நிர்மலா சீதாராமன் : டெல்லியில் பரபரப்பு

இன்று டெல்லி சென்ற தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் முதலில் அமித்ஷாவை சந்திக்கவிருப்பதாகவும், அதன் பின்னர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட ஒருசில அமைச்சர்களை சந்திக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் சற்றுமுன் டெல்லியில் பேட்டியளித்த துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் தனது டெல்லி பயணம் அரசியல் பயணம் அல்ல என்றும், தனது சகோதரர் சிகிச்சைக்கு ராணுவ ஹெலிகாப்டர் கொடுத்து உதவிய நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவிக்கவே டெல்லி வந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்தின் அதிகார்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ,தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லை என்றும்,  மைத்ரேயன் எம்பியை மட்டுமே சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த டுவீட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துணை முதல்வரை சந்திக்க நிர்மலா சீதாராமன் அனுமதி வழங்கவில்லையா? அப்படி வழங்கவில்லை என்றால் என்ன காரணம்? என அதிமுக வட்டாரம் பெரும் பரபரப்பில் உள்ளது.