வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 24 ஜூலை 2018 (07:31 IST)

அமித்ஷாவுடன் ஓபிஎஸ் இன்று சந்திப்பு: மீண்டும் முதல்வர் ஆகிறாரா?

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் ஒருசில மத்திய அமைச்சர்களை சந்திக்க  துணை முதல்வர் பன்னீர் செல்வம் இன்று டெல்லி சென்றுள்ளார். அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்து அவர் அமித்ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
 
கடந்த சில நாட்களாக முதல்வருக்கு நெருக்கமானவர்கள் மீது வருமான வரித்துறையினர் சோதனை செய்ததால் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து முதல்வர் மாற்றப்படலாம் என்றும் வதந்திகள் வெளிவந்தன. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராக வாய்ப்பு இருப்பதாகவும், இதற்கான நடவடிக்கைகளை பாஜக மேலிடம் எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன் ஆதரவாளர்களுடன், டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் அமித்ஷாவை முதலில் சந்திக்கவுள்ளதாகவும், அதன் பின்னர் மத்திய அமைச்சர்கள், நிர்மலா சீதாராமன், பியுஷ் கோயல் ஆகியோர்களை சந்திக்கவுள்ளதாகவும், இந்த சந்திப்புக்கு பின்னர் அதிமுகவிலும் ஆட்சியிலும் திடீர் மாற்றங்கள் இருக்கும் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.