கடைசி ஆசை கூட நிறைவேறாமல் தூக்கிலிடப்பட்ட குற்றவாளிகள்: அதிர்ச்சி தகவல்
கடைசி ஆசை கூட நிறைவேறாமல் தூக்கிலிடப்பட்ட குற்றவாளிகள்
டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. குற்றவாளிகள் நால்வரும் சாகும் வரை தூக்கில் இடப்பட்டதாகவும் அவர்களது மரணம் உறுதி செய்யப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் குற்றவாளிகளை காப்பாற்ற கடைசி வரை அவரது வழக்கறிஞர் சட்டப் போராட்டம் நடத்தினார். இன்று அதிகாலை 2 மணிக்கு கூட ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
இதனையடுத்து கடைசியாக, குற்றவாளிகளின் கடைசி ஆசையாக அவர்களது குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். ஆனால் இந்த கோரிக்கைக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததால் குற்றவாளிகள் அவர்களுடைய உறவினர்களை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை
இந்த நிலையில் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு குற்றவாளிகளுக்கு தண்ணீர் மற்றும் டீ வழங்கப்பட்டதாகவும் அதனை ஏற்க குற்றவாளிகள் மறுத்து விட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. கடைசி ஆசை கூட நிறைவேறாமல் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது