1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 20 மார்ச் 2020 (05:29 IST)

தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 4 குற்றவாளிகள்: திஹார் சிறை முன் பலத்த பாதுகாப்பு

தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 4 குற்றவாளிகள்
கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளுக்கு இன்னும் சில நிமிடங்களில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது இதனை அடுத்து குற்றவாளிகள் 4 பேரும் சற்று முன்னர் தூக்கு மேடைக்கு அழைத்து செல்லப்பட்டனர் 
 
இது குறித்து எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க டெல்லி திகார் சிறையில் பலத்த  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான போலீசார் திஹார் சிறை முன் குவிக்கப்பட்டு உள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இன்னும் சில நிமிடங்களில் நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள.து சரியாக 5.30 மணிக்கு டெல்லி திகார் சிறையில் அவர்கள் குற்றவாளிகள் அனைவரும் தூக்கிலிடப்படவுள்ளனர்.
 
முன்னதாக டெல்லி திகார் சிறையில் 4 குற்றவாளிகளுக்கும் கடைசி மருத்துவ பரிசோதனை முடிவடைந்தது  என்பதும் நான்கு பேர்களின் உடல்நிலையும் நன்றாக இருப்பதாக கடைசியாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்