செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2022 (09:28 IST)

30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி வாசித்த சரோஜ் நாராயணசாமி காலமானார்!

saroj narayana samy
30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி வாசித்த சரோஜ் நாராயணசாமி காலமானார்!
அகில இந்திய வானொலியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி வாசிப்பாளராக இருந்த சரோஜ் நாராயணசாமி காலமானார்
 
அகில இந்திய வானொலியில் தனது கணீர் குரலால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி வாசிப்பாளராக இருந்தவர் சரோஜ் நாராயணசாமி. இவரது செய்தி வாசிப்புக்கு என்றே பல ரசிகர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி இன்று மும்பையில் அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 87. அவருடைய மறைவிற்கு பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
30 ஆண்டுகளுக்கு மேலாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பிறகு ஒலிபரப்புத் துறையில் சிறந்த பங்களிப்புக்காக கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது