1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 12 செப்டம்பர் 2024 (13:30 IST)

தலையில்லாத நிர்வாண உடல்.. தேசிய நெடுஞ்சாலையில் வீசப்பட்ட பெண் யார்?

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் தலை இல்லாத பெண்ணின் உடல் தூக்கி வீசப்பட்டிருப்பதை அடுத்து அந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கான்பூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இளம் பெண் ஒருவரின் தலையற்ற உடல் நிர்வாணமாக இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை செய்து வருகின்றனர். கொலை நடந்த பகுதியில் எந்த ஒரு சிசிடிவி கேமராவும் இல்லை என்பதால் அவர் யார் என்பது கண்டுபிடிப்புகள் சிரமம் இருப்பதாகவும் மூன்று கிலோமீட்டர் தள்ளி உள்ள ஒரு சிசிடிவி கேமராவில் மட்டும் அவர் தனியாக நடந்து செல்லும் காட்சி உள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 4 தனிப்படைகள் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Edited by Siva