வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2023 (18:41 IST)

முஸ்லிம்களுக்கான 4% இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம்: அமித்ஷா உறுதி

Amitshah
தெலுங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் ஆகிய மூன்று கட்சிகளும் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்த நிலையில் தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ள நிலையில் அந்த இட ஒதுக்கீட்டை பாஜக ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.  இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானா மக்கள் அயோத்திக்கு சென்று இலவசமாக ராமரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Edited by Siva