கணவரிடமிருந்து காப்பாற்ற கோரி கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பெண்
மும்பைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவர் தன்னை சித்தரவதை செய்வதாகவும் அதிலிருத்து தன்னை காப்பாற்ற உதவுமாறு சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவர் தன்னை சித்தரவதை செய்வதாகவும் அவரிடமிடந்து காப்பாற்றுமாறு கண்ணீருடன் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவை பாலிவுட் தயாரிப்பாளர் அஷோக் பண்டிட் டுவிட்டரில் பகிர்ந்து, அந்த பெண்ணுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார்.
அந்த பெண் காவல் நிலையத்தில் தனது கணவர் மீது இரண்டு புகார் கொடுத்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அந்த பெண்ணின் கணவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த வீடியோ குறித்து மும்பை போலீஸ் டுவிட்டரில், DCP மண்டல 9 இந்த விஷயத்தை கவனித்து வருவதாக கூறியுள்ளது.
இந்த வீடியோ டுவிட்டரில் வைரலாகி நெட்டிசன்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.