திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 5 பிப்ரவரி 2018 (14:24 IST)

காதலித்ததால் பெற்ற மகளை மொட்டை அடித்து துன்புறுத்திய பெற்றோர்

மதுரை அருகே பெண் ஒருவர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலித்ததால், அவரது பெற்றோர் பெண்ணிற்கு மொட்டை அடித்து கொடுமை படுத்திய சம்பவம் அரங்கேரியுள்ளது.
மதுரை மாவட்டம் தன்னூரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அபிநயா. இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அபிநயா வெங்கடேஸ்வரன் என்ற ஆட்டோ டிரைவரை காதலித்து வந்தார். இவர்களின் காதல் விஷயம் அபிநயா வீட்டிற்கு தெரிய வரவே, அவரது பெற்றோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இதனையடுத்து வீட்டில் இருந்து வெளியேறிய அபிநயா வெங்கடேஸ்வரனை திருமணம் செய்து காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். போலீஸார் அபிநயா வீட்டாரை அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி, அபிநயாவை அவரது பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்.
 
இந்நிலையில் வீட்டிற்கு சென்ற அபிநயாவை அவரது பெற்றோர் மொட்டை அடித்து துன்புறுத்தியுள்ளனர். போலீஸார் அபிநயாவின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.