புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 13 செப்டம்பர் 2021 (16:32 IST)

மும்பை பங்குச்சந்தை இன்று 127 புள்ளிகள் சரிவு!

மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் இருந்தது என்பதும் 58 ஆயிரத்திற்கும் அதிகமான புள்ளிகள் சென்செக்ஸ் பெற்றது என்பதும் அதேபோல் நிப்டி 17 ஆயிரத்திற்கும் அதிகமான புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்
 
இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே மும்பை பங்குச் சந்தை வீழ்ச்சி அடையத் தொடங்கியது. அதிக லாபம் காரணமாக பங்குகளை முதலீட்டாளர்கள் விற்பனை செய்து வருவதன் காரணமாகவே வீழ்ச்சி அடைந்து வருவதாக கூறப்படுகிறது
 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 127.31 புள்ளிகள் இறங்கி 58177 என்ற புள்ளியில் வர்த்தகம் நிறைவடைந்தது. அதேபோல் நிஃப்டி 13.95 புள்ளிகள் இறங்கி 17355 என்ற புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்னும் சில நாட்களுக்கு சென்செக்ஸ் மற்றும் நிப்ஃடி ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.