கொரோனா வந்த மாமியார்… பழிவாங்க மருமகளைக் கட்டிப்பிடித்த கொடூரம்!
தெலங்கானா மாநிலத்தில் கொரோனா பாதித்த மாமியார் ஒருவர் மருமகளைக் கட்டிப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், ராஜன்னா சிர்சிலா மாவட்டத்திலுள்ள நெமிலி குட்டாதண்ட என்ற பகுதியில்தான் இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது. அந்த வீட்டின் மாமியாருக்கும் மருமகளுக்கும் கீரி பாம்பு சண்டையாக கடந்த 3 ஆண்டுகள் நடந்து வந்துள்ளன. இந்நிலையில் மாமியாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவரை வீட்டில் ஒரு அறையில் தனிமைப்படுத்தியுள்ளனர்.
அப்போது மருமகள் அவரிடம் இருந்து சமூக இடைவெளியைக் கடைபிடித்துள்ளார். தனிமையில் இருந்த ஏற்பட்ட மன அழுத்தத்தால் மருமகளிடம் ஏற்பட்ட கோபம் காரணமாக அவருக்கும் கொரோனாவை பரப்பும் விதமாக அவரை அடிக்கடி கட்டிப் பிடித்துள்ளார். இதனால் அவருக்கும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து சகோதரர் வீட்டுக்கு சென்று தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இது சம்மந்தமாக போலிஸ் புகார் அளிக்க அவர்கள் விசாரணை மேற்கொள்ள உள்ளார்.