அலுவலகம் வந்து வேலை பார்க்க சொன்னால் ராஜினாமா செய்யும் ஊழியர்கள்!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நிறுவனங்களில் வீட்டில் இருந்து ஊழியர்களை பணி செய்ய வைக்க கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டதாலும் தடுப்பூசிகள் புழக்கத்திற்கு வந்து விட்டதாலும் மீண்டும் அலுவலகம் வந்து பணிபுரியவும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்
ஆனால் மீண்டும் அலுவலகம் வந்து பணி செய்ய கூறினால் வேலையை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக பல ஊழியர்கள் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஆய்வு ஒன்றில் 58 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்வோம் என்றும் அலுவலகம் வருவதற்கு கட்டாயப்படுத்தினால் வேலையை விட்டு விடுவோம் என்று கூறியுள்ளனர்
11 சதவீதம் பேர்கள் மட்டுமே அலுவலகம் சென்று வேலை செய்வோம் என்று கூறியுள்ளனர். வீட்டிலிருந்தே பணி செய்வது வசதியாக இருப்பதாகவும் போக்குவரத்து இடைஞ்சல் மற்றும் பல்வேறு காரணங்களால் அலுவலகம் செல்ல விரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர்